விருதுநகர் மாவட்டத்தில் 2180 பேருக்கு ரூ.1.37 கோடியில் நலத்திட்ட உதவிகள்
உழவர் பாதுகாப்பு திட்டம் சார்பில் 2180 பயனாளிகளுக்கு ரூ.1.37 கோடியில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்


உழவர் பாதுகாப்பு திட்டம் சார்பில் 2180 பயனாளிகளுக்கு ரூ.1.37 கோடியில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்
விருதுநகர் வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரி வளாகத்தில் உழவர் பாதுகாப்பு திட்டம் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாநில வருவாய்த்துறை செயலாளர் சுகதீப்சிங்பேடி தலைமை வகித்தார். மாநில நில சீர்த்திருத்த துறையின் செயலாளர் ரெ.ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். இதில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்கள்.
இதில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், உழவர் பாதுகாப்பு திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத முதல்வரின் சிறப்பு திட்டமாகும். இத்திட்டம் விவசாயிகளுக்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் கருவறை முதல் கல்லறை வரையிலான பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. இதில், தமிழகம் முழுவதும் 2.63 கோடி பேர் உறுப்பினர்கள் பயனடைந்து வருகின்றனர். அதேபோல், ஆண்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.8 ஆயிரத்தை இந்த அரசுதான் வழங்குகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறுகையில், தற்போது நடைபெறும் விழாவில் முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் 2180 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, முதியோருக்கான ஓய்வூதியம், விபத்து நிவாரணம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால் இத்திட்டங்களை அனைவரும் அறிந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், இந்த விழாவில் 2180 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை காசோலைகளாக அமைச்சர்கள் வழங்கினர்.
மேலும், இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுப்பாண்டியன், மாவட்ட ஊராட்சி தலைவர் அ.வசந்தா, மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, சிவகாசி உதவி ஆட்சியர் அமர்குஷ்வாஹா, விருதுநகர் நகராட்சி தலைவர் மா.சாந்தி, ஒன்றியக்குழு தலைவர்கள் வேலாயுதம்(சாத்தூர்), கா.ரேவதி மற்றும் வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...